19 December 2009

மணப்பெண் 2


மொட்டுக்குள் ஒளிந்திருந்த நறுமணம்
இதழ் விரிக்கும் பூவிற்கு அடையாளம்
தரிசு நிலத்தில் தோன்றும் மண் வாசம்
நிலம் தீண்டிய மழைத்துளிக்கு அடையாளம்
தனிமையான தருணங்களில் கூட
என் கன்னத்தில் தோன்றும் புன்னகை குழி
மனதின் மையத்தில் மையமிட்டிருந்த காதலின் அடையாளம்

அன்று என்னருகே கல்லென இருந்த கணவனில்
இன்று கிழக்கில் தோன்றும் சூரியனை போல
சாசுவதமான காதல்
ஆழத் தூங்குகையில் ஆதரவான ஒரு கரம்
அணைத்து கொண்டிருந்தால் காதல் தோன்றுமோ?
வயல் வெளி பாதைகளில் குடை துறந்து
மழைப்போர்வை போர்த்து கொள்ள துணை வந்தால் காதல் தோன்றுமோ?
மொட்டை மாடி நிலவில் தோளணைத்து
தன் தோல்வியடந்த காதலை சொன்னால் காதல் தோன்றுமோ?
கால் தழுவி செல்லும் அலைகளுடன்
நடந்து செல்கையில் விரல் கோர்த்து கொண்டால் காதல் தோன்றுமோ?
என்னை அறியாமல் ஏதோ ஒரு அற்புதமான நொடியில்
பூத்தது இளம் காதல்..
தளைகள் உடைந்தன..
இருளாக தோன்றிய எதிர்காலம்
மூன்றெழுத்து சாதாரணமான வார்த்தைக்குள்
என்னவனுடன் இணைந்து விட்டதால்
ஒவ்வொரு விடியலும் அழகாக தெரிந்தது.
மனைவி, மருமகள், அண்ணி என மருட்டிய
விதிமுறைகள் காதலி, மகள், சகோதரி
என உரிமை நிறைந்த புது உறவுகளுக்குள்
கை கோர்த்து கொண்டன.
கன்னத்தில் முத்தமிட்டு கையசைத்த
கணவனின் விழியுயர்த்தி பார்க்கையில்
இன்றும் கரித்தது
ஆனந்தத்தில்.

4 comments:

  1. ”கன்னத்தில் முத்தமிட்டு கையசைத்த
    கணவனின் விழ்யுயர்த்தி பார்க்கையில்
    இன்றும் கரித்தது
    ஆனந்தத்தில். ”
    எஸ். இது போன்று சந்தோஷங்களை கவிதையாக்க முடியும் போது ஏன் சோக படைப்புகள் வருகின்றன? வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நீங்கள் சோகமான கவிதைக்கு தந்த கருத்தே இதை எழுத தூண்டியது, ஆனால் இதன் முதல் பகுதி வெகு காலத்துக்கு முன்னர் எழுதியது.. எழுத்துகளில் சிறு பிள்ளை தனம் இருப்பது போல் ஒரு பிரமை. நன்றி.

    ReplyDelete
  3. unkal thavepu velankuthu enum aluthunaka varaykeinran

    ReplyDelete
  4. nalla kavithaiigu an vanakangal

    ReplyDelete