14 December 2009

தாய்மை


சின்னஞ் சிறு சாரல் அவள்
வெண் பஞ்சு குவியல் அவள்
கதை சொல்லும் கண்கள்
ஈரமான இதழ்கள்
ரோஜா பூக்கும் கன்னங்கள்
சிரிக்கையில் சிதறும் முத்துகள்
அவ்வளவு அழகாக இருந்தாள்
என் மூன்று வயது மகள்
நான் கைக்குள் சிறைப்படுத்தியிருந்த
நிழல் படத்தில்
எத்தனை அழகான மகள் என் மகள்
அவள் இனி இல்லையாம்
அதை நான் நம்பவும் வேண்டுமாம்
அவளின் தேவதை கனவுக்குள் நான்
சிறகு விரித்திருந்த வேளை
அருகிலிருந்தவள்
நான் விழித்து பார்க்கையில்
வெண்ணிற பூக்குவியல் புனைந்த ஆடையுடன்
ஒரு பெட்டிக்குள்
நான்கு நாள் தாடியுடன் என் கணவன்
நான் விழித்ததும் வீறிட்டு அழுத என் தாய்
ஏன் என என் விழியில் எழுந்த வினாவுக்கு
ஆதரவாக தோள் தடவி அப்பா சொன்னார்
விபத்தாம் என்று
விழிகளில் நீர் கோர்க்கவில்லை
வினாக்களே தோன்றியது
நம்ப முடியாத அதிசயம் என்று ஏதாவது
உண்டு என்றால் அது இது தான்
துள்ளி விளையாடும் மகளை
தூக்கி செல்ல காலன் கடினமானவன் இல்லை
என அடித்து சொல்லியது மனம்
இன்றுடன் ஒரு மாதமாகிறது
அவளை தேடி அலைந்து கொண்டிருக்கின்றேன்
ஒரு தெரு முனையிலாவது
அவள் நிற்க மாட்டாளா
என்று!!!!!

4 comments:

  1. கண்ணீரைதவிர கமெண்ட் ஏதும் வரவில்லை...

    ReplyDelete
  2. vaarthagalum, enna ottangalum nindru vittana.

    ReplyDelete
  3. என்ன சொல்றதுன்னு தெரியல....வலியுடன் படித்து முடித்தேன்.(நானும் என் செல்லத்தை இழந்தவள்)கொடுமையானது இந்த தாய்மையின் வலி!

    ReplyDelete