Popular Posts
08 December 2009
தனிமை
யாரும் இல்லாத ஊர் உலகம்
உறங்கிய பொழுதில் நீ
விழித்திருந்தால் தனிமை
என்று யார் சொன்னது
ஆயிரம் பேர் நடுவில் கூட
தனித்து நிற்கிறேன்
சுற்றி நடக்கும் காட்சிக்கு
நான் சாட்சியில்லை என்பது போல்...
வானத்திலிருந்து அசுர வேகத்தில்
நீர் ஊற்று பாறையில் விழுந்தும் இறக்காத
மழைத்துளி
இலக்கற்று பாலைவனத்தில்
விழுந்ததால் மடிவது போல
சூனிய சிறைக்குள் சிக்கி
சின்னா பின்னாமடைகிறேன்
காரணம் ஏமாற்ற வேலிக்குள்
என்னையும் என் சிந்தனையையும்
சிறைப்படுத்தி விட்டு
என்னவன் என நான் எண்ணியிருந்தவன்
தன்னவள் என இன்னொருத்தியை
இனம் காட்டியதால்…..
தினம் தினம் ஏற்றப்படும்
சிக்கன சில்லறை சிலுவைகளும்
அதில் வடியும் கண்ணீர் குருதியும்
ஆழ்கடல் மீனின் அழுகை போல்
வலிந்திழுத்த சிரிப்புக்குள்
அடக்கப்பட்டு வெளி வராத ரகசியமாயின,
குருட்டு விழிகளின் கனாக்களும்
இழந்த செவிப்புலனின் இசையும்
நீ என்ற பொய்மைக்கும்
நான் என்ற வெறுமைக்கும்
மத்தியில்
எங்கோ ஒரு கை காட்டி தெருவில்
அசாத்தியமான இனிமையில்…
Subscribe to:
Post Comments (Atom)
ரகசியம்தான். வேறு வழி?
ReplyDeleteகவிதை மிக மிக அழகு..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அழகான மொழி வரிகளெங்கும். வார்த்தைகளின், கருத்தாக்கத்தின் பல பரிமாணங்களுக்குள் உள் சென்று வெளிவருவது சுகமான அனுபவமாய்... வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDelete