வெண்மை நாணிய தண் மலர் ஒன்று
பாலனவனின் கையில் இருந்து
இமை சிறகுகள் விடை பெற்ற வினாடிக்குள்
செஞ்சூரிய வண்ணம் பூசி மண் கவிழ்ந்தது
காலனவனின் பாசக்கயிறு
எறிகணைகளாகியதால்
மலருக்கு புது நிற பதிப்பு
மலர் சுமந்த சின்னவன்
மார்க்கண்டேயனின் மறுபதிப்பு இல்லையே????
மண் கவிழ்ந்தான் மலரை போலவே
புன்னகை இழந்த புது சிவப்புடன்...
நல்லாருக்கு...(ஆமா ஸ்ரைலா பைக்ல போறதா இருந்தீங்களே என்னாச்சு?)
ReplyDeleteஅதான் முட்டி உடஞ்சிடும் எண்டாச்சில்ல…பிறகென்ன செய்ய??? மாட்டு வண்டிலில போலாம்னு முடிவெடுத்திட்டன்....:)
ReplyDeleteநன்றி…:)
ReplyDeleteமிகவும் நன்றாக இருக்கிறது..
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...