05 January 2010

விவாகரத்து


என் கடல் பாதைகளில்
இல்லாத கலங்கரை நீ
என் புரியாத கவிதைகளில் தெரியாத
எழுத்து பிழை நீ
என் குருட்டு விழிகளில் ஜனிக்கின்ற
இருட்டு கனவுகள் நீ
என் விழிகள் சுமக்கின்ற
உப்பு தரளங்கள் நீ
என் வயல் நிலங்களில் நின்று போன
பருவ மழை நீ
என் கட்டிலில் காணாமல்போன
ஒற்றை தலையணை நீ
என் பாதைகளில் தேய்ந்து போன
காலடி தடயங்கள் நீ
என் விடியல்கள் மறந்து போன இதமான
முத்தங்கள் நீ
என் புது குங்கும கலயம் அறியாத
செந்நிறம் நீ
என் வாழ்வில் உன் பாதியை ரத்தாக்கிய
ஒற்றை கையொப்பம் நீ

7 comments:

  1. //புரியாத கவிதைகளில் தெரியாத
    எழுத்து பிழை நீ//

    வேண்டாத ஒரு ரத்து இது என்று சொன்னால் ஒத்துக்கொள்பவர்கள் வெகு சொற்பமே.

    ReplyDelete
  2. என் கட்டிலில் காணாமல்போன
    ஒற்றை தலையணை நீ
    என் பாதைகளில் தேய்ந்து போன
    காலடி தடயங்கள் நீ

    மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. நன்றிகள்...:)

    ReplyDelete
  4. //என் புரியாத கவிதைகளில் தெரியாத
    எழுத்து பிழை நீ!//
    //என் வாழ்வில் உன் பாதியை ரத்தாக்கிய
    ஒற்றை கையொப்பம் நீ//

    அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete