23 December 2009

தொலைந்த காதல்



மாலைநேர தென்றல்
சாலையோர தெருவிளக்கு
அலைகரை மணல்வீடு
சோலையிளம் தென்னங்கீற்று
மலைச்சாரல் வெண்ணிலவு
தலை சாய்க்கும் சாளரக்கம்பி
சிலையில் உளி செதுக்கிய கண்ணீர் துளி
சேலையில் தப்பிக்கொண்ட நான்காவது மடிப்பு
வேலை நேரத்தில் கூட தோன்றும் வெறுமை
தொலை பேசியில் மின்னி மறையாத உன் எண்கள்
தொலைந்த காதல் சொல்லின இவையெல்லாம் சொல்லாமல்
இலையுதிர் கால சருகுகள் போல நான்
பாலை நிலத்தில் காய்ந்து போன மழைத்துளியாய் நீ..

5 comments:

  1. ஆனால் சாரலாய் இருக்கு கவிதை.....

    ReplyDelete
  2. //இலையுதிர் கால சருகுகள் போல நான்
    பாலை நிலத்தில் காய்ந்து போன மழைத்துளியாய் நீ..//

    பீலிங்க்ஸ்...பீலிங்க்ஸ் கவிதை..ரசித்தேன் தர்ஷி !!!

    ReplyDelete
  3. // இலையுதிர் கால சருகுகள் போல நான்
    பாலை நிலத்தில் காய்ந்து போன மழைத்துளியாய் நீ //

    நல்லா இருக்கு

    ReplyDelete
  4. உங்கள் பதிவுகள் மிகவும் அழகாய் இருகின்றன.
    இன்றுதான் கண்டு கொண்டேன். இந்த அவளை:

    ReplyDelete