
ஒளியிருந்தும் உயிரிழந்து
உலவுகிறதே என் வானில்
ஒரு நிலா
அது ஏன்??
மாரிக்கால தவளைகள்போல்
நிறுத்தாமல் நிந்திக்கிறதே
என்னை என் மனம்
அது ஏன்??
புள்ளியாகியும் தொலையாமல்
என் பார்வை சிறைக்குள்
பதிந்ததே உன் பாவை முகம்
அது ஏன்??
உன் ஒற்றை சொல்லால்
உலகு மறந்து வான் பறந்த மனது
இன்றும் உன் ஒற்றை சொல்லால்
புவி பிழந்து உயிரீரம் வற்ற
துடிக்குதே
அது ஏன்????
அகாலமாய்
ஒரு அந்தி மாலையில்
மரணித்ததே
நம் காதல்
அது ஏன்??
என் வலி
என் ரணம்
என் கண்ணீர்
என் கேள்விகளின் ஆழம்
அறியாமல் நீ
அது ஏன்???