31 August 2010

நானென்ன இயேசுவா???


பக்கத்து வீட்டுக்காரன் வீடு வேண்டினால்
வாடகை வீட்டில இருக்கும் என்
அடி வயிறில் பற்றி
எரியும் பொறாமை….
பச்சை பிழையெண்டாலும்
என்னை விட்டுகுடுக்கேலா
எண்டு தொடங்கும்
எழுந்தமான சண்டை….
அதிகாரம் செய்பவனை
ஒண்டும் செய்யேலாம
அடக்கி வைச்ச வெறுப்பு..
ஆறு வயது பிள்ளை
தட்டி கொட்டினான மட்டும்
அடக்க முடியா கோபம்…
வாயால மன்னிச்சாலும்
நெஞ்சு முழுக்க சகுனம் பார்த்து
காத்து நிக்கும் வஞ்சம்…
பக்கத்து வீட்டுக்கு போய்
தேத்தண்ணி குடிச்சிட்டு
மூட்டி வச்சிட்டு வரும் கலகம்…
மூட்டை பூச்சி போல
உடம்பை உறிஞ்சும்
ஒரு வித மன சாத்தான்..
அண்டை வீட்டு பிரச்சினை
எல்லாம் அடுக்களையுக்க
அலசி ஆராயும் வம்பு வாய்…

”செய்யாதே” எண்டதெல்லாம்
கட்டாய தேவையானது
இயேசுவா நான்….
இல்லையே…