30 September 2010

இல்லை!!


தெருவோர கல் முதல்
சிலை கொண்ட கல் வரை
பாலபிசேகம் பட்டாபிசேகம்
ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது
ஏழை வயிறு…
கல்லுக்குள் கடவுள் இல்லை

முந்நூறாவது நாளாக
கையில் கனத்த ரோஜாவுடன்
அவளுக்காக காத்திருப்பு
அன்றும் தாண்டித்தான் செல்கிறாள்
தீண்டச் சொல்ல
பூக்களுக்குள் வார்த்தை இல்லை

சிந்திய முதல் வெட்கம்
சேமித்த முதல் முத்தம்
இனித்த காதல்
வலித்த பிரிவு
நினைவுகளுக்குள் நிம்மதி இல்லை..

தீண்டாமை
வறுமை
சமவுரிமை
அறியாமை
கயமை
அத்தனையயும் மை கொண்டு மாற்ற நினைத்தான்
கவிதைகளுக்குள் சாட்டை இல்லை..