
நீ தந்த கடிதங்கள்…
நீ தந்த முத்தங்கள்…
மணித்தியால துளிகள் உன் குரலுடன்
மரித்த பொழுதுகள்…
உனை நினைத்து நான் உருக
யாரோ எழுதிய பாடல்கள்…
உனை நினைத்தேங்கி
நான் எழுதிய கிறுக்கல்கள்…
என நான்
சேகரித்த உன் நினைவுகளை
செலவு செய்ய மனமில்லை
இன்று எங்கோ மின் விசிறிக்கடியில்
நீ உறங்கையில்
நான் நட்சத்திரங்களடியில் இருந்து
எண்ணி எண்ணி சேமிக்கிறேன்
பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல்
உறங்காமல்
ஏனோ இதயம் மட்டும்
பெருங்குரலெடுத்து அழுகிறது
அனாதை ஆனது அதுவல்லவா??