
காரிருளில் வானவில்
குருடன் கவிஞனான போது..
அலை கடலில் தித்திப்பு
தண்ணீரெல்லாம் உப்பாகிய போது..
மௌனம் கூட தாலாட்டு
ஊமை அன்னையாகிய போது..
பட்டாம் பூச்சி கூட காதலன்
பூக்கள் காதல் கொண்ட போது…
பஞ்சு தலையணை கூட முள் மடி
மனைவி ஊடல் கொண்ட போது…
தூறல் கூட மழை தெய்வம்
விவசாயியின் பயிர் உடல் நனைத்த போது..
தனிமையெல்லாம் நரகம்
பள்ளி விடுமுறையில் நட்பு பிரிந்த போது..
நட்பெல்லாம் நரகம்
புதிதாக வந்த காதல் உடல் சிலிர்த்த போது…
மூச்சு காற்று கூட ரகசியம்
கன்னிக்கு காதல் வந்த போது….
அடுக்கடுக்காய் கோர்க்கப்பட்டிருக்கு வார்த்தைகள்..
ReplyDeleteபடிக்க வாசிக்க ராகமா இருக்கு...
எங்க தமிலிஷ் ல சேர்க்கல (நான் சேர்த்துட்டேன்) நல்லா இருக்குங்க .:)
ReplyDeleteதமிழிஷ் கூட போர்
ReplyDeleteநீங்க கவிதை எழுதாத போது
எப்படி..?
மிக அழகு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ரசிக்கும்படி இருக்கிறதுங்க கவிதை !!!
ReplyDelete//மூச்சு காற்று கூட ரகசியம்
கன்னிக்கு காதல் வந்த போது…. //
நல்ல வரிகள் !!!
:) நல்லாருக்குங்க..
ReplyDeleteசரளமாய் வார்த்தைகள் முத்துச் சரமாய் கோர்த்துக் கொண்டு சுக அனுபவம்
ReplyDelete//
ReplyDeleteதனிமையெல்லாம் நரகம்
பள்ளி விடுமுறையில் நட்பு பிரிந்த போது..
நட்பெல்லாம் நரகம்
புதிதாக வந்த காதல் உடல் சிலிர்த்த போது…
//
இது நல்லாயிருக்கே... :-))
இதே மாதிரி இன்னும் இரண்டு வரிகளை சேர்க்கலாம் என்று பார்த்தேன். முடியவில்லை. எல்லாவற்றையும் நீங்களே எடுத்து கொண்டீர்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletelove the last bit machi!
ReplyDelete