24 December 2009

ஒதுக்கம்



வெறுமை தாழ் கொண்டு
தனிமை சிறைக்குள் பூட்டி கொண்ட
சூழ்நிலை கைதி அவள்
கண்மை கொண்ட கண்களுக்குள்
பெண்மையின் அருவி அவள்
கனா இழந்த விடியல்கள் அவள்
கண்ணீர் இழந்த விழிகள் அவள்
வரண்ட புன்னகை இழந்த இதழ்கள் அவள்
ஆரவாரமில்லாத அமைதி அவள்
சொல்லிழந்த கவி அவள்
இசையிழந்த மௌனம் அவள்
ஆசைகள் இழந்த ஆகுதி அவள்
சுவர் கண்ணாடியில் தனித்து சிரித்து பார்க்கும்
விசித்திரம் அவள்
குழாயில் சிதறும் நீருடன் கதறி பார்த்தும்
கண்ணில் நீர் கோர்க்காத பரிதாபம் அவள்
புள்ளினம் கூட ரகசியம் பேசும் அதிசயம் அவள்
மின்னல் மழையின் பள்ளித் தோழி அவள்
வெள்ளி நிலவின் புன்னகை வெளிச்சம் அவள்
காட்டு பாதையில் வீட்டு ரோஜா அவள்
புல்லாங்குழலின் மெல்லிசை மோகனம் அவள்
ஒற்றையாகி போன அன்றில் பறவை அவள்
விளக்கினை நாடாத விட்டில் விசித்திரம் அவள்
கடினமான வாழ்க்கை விடுகதையின்
இலகுவான பதில் அவள்
அவசர உலகில் இருந்து
வலியின்றி ஒலியின்றி
அழகாக ஒதுங்கி கொண்டதால்…..

5 comments:

  1. //கடினமான வாழ்க்கை விடுகதையின்
    இலகுவான பதில் அவள்
    அவசர உலகில் இருந்து
    வலியின்றி ஒலியின்றி
    அழகாக ஒதுங்கி கொண்டதால்….. //

    கொடுத்து வைத்த பெண்ணவள்.கவிதை நன்று !!!

    ReplyDelete
  2. நன்றி அண்ணா...:)

    ReplyDelete
  3. அடப்பாவமே... ஏன் இப்படி?

    ReplyDelete
  4. நல்லா போய்கிட்டு இருந்துச்சு.
    அய்யோ பாவம் அவள்.

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல இருக்குங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete