19 December 2009

காதலித்து பார்த்தேன்


காதலித்து பார்த்தேன்
அஸ்தமனங்கள் கசத்தன
பிரிய வேண்டுமே என்ற தவிப்பில்
விடியல்கள் இனித்தன
சந்திப்புகளின் புத்துணர்ச்சியில்
கண்ணாடிக்கு கண் வலித்தது
அழகு பார்த்த மணி நேரங்கள் அதிகரித்ததால்
தொலைபேசிக்கு செவி வலித்தது
மீண்டும் மீண்டும் பரிமாறிய அதே காதல் வார்த்தைகளால்
தலையணைக்கு கழுத்து வலித்தது
கட்டியணைத்த வேகங்களை தாங்க முடியாமல்
மழைதூறலாய் மலர்சாலையாய்
உனக்குள் என்னை ஆயுள் கைதியாக்கி கொண்டேன்
எதிர்காலம் இனித்தது இன்ப கனவுகளில்
கூட்டங்களும் கூச்சல்களும் கசத்தன
தனிமை பிடித்தது
தனிமையில் புன்னகைக்க பிடித்தது
பூக்கள் பிடித்தது
பனித்துளி பிடித்தது
மொத்தத்தில் பைத்தியம் பிடித்தது
காலச்சக்கரத்தில் காட்சிகள் புதைந்தன…
ஊமைக்கனவுக்கும் முடிவு வந்தது

வண்ண நிலவின் தவங்கள்
வனாந்தரங்களிலும் பாலை நிலங்களிலும்
ஒளி பொழிவது போல்
மாட மாடங்களிலும் பூக்களின் சோலையிலும்
ஒளி பொழிவது இயற்கை…
ஒரு பூவில் தேன் கண்ட வண்ணத்து பூச்சி
அடுத்த மலர் தாவுவதும் இயற்கை
இயற்கையை தவறு சொல்ல இயலாததால்
இதுவரை நேசித்த அத்தனையுடனும்
என்னையும் சேர்த்து வெறுக்கிறேன்
தண்டனையாய்
ஆனால் அடி மனதின் உள்ளிருட்டில்
உண்மை கண்டேன்..
எங்கு தோற்றேன் என்று தெரியாமல்
ஏன் தோற்றேன் என்று அறியாமல்
பிரிவுடன் மரத்து போனது
இதயம் மட்டும் அல்ல அத்தனை
புலன்களும் என்று
விழிகள் திறந்த விடியல்கள் புரியாமல்
இருட்டுக்குள்ளே
அடையாளமாய் நானும்
காதலித்து பார்த்தேன்

9 comments:

  1. காதலித்து பார்த்தேன்
    ஏன் தோற்றேன்?
    ellorukum vidai theriyum!!
    mattangal varuvathu kallathal mattumthan!!!

    simply superb thar!! keep enjoy writing!!

    ReplyDelete
  2. ஆனால் அடி மனதின் உள்ளிருட்டில்
    உண்மை கண்டேன்..
    எங்கு தோற்றேன் என்று தெரியாமல்
    ஏன் தோற்றேன் என்று அறியாமல்
    பிரிவுடன் மரத்து போனது
    இதயம் மட்டும் அல்ல அத்தனை
    புலன்களும் என்று
    விழிகள் திறந்த விடியல்கள் புரியாமல்
    இருட்டுக்குள்ளே
    அடையாளமாய் நானும்
    காதலித்து பார்த்தேன் //

    நானும் தாங்க... :(

    அருமை :)

    ReplyDelete
  3. நன்றிகள்..:)

    ReplyDelete
  4. ”இயற்கையை தவறு சொல்ல இயலாததால்
    இதுவரை நேசித்த அத்தனையுடனும்
    என்னையும் சேர்த்து வெறுக்கிறேன்
    தண்டனையாய்”
    நம்மால் முடிந்தது அதானே...?

    ReplyDelete
  5. அடடா..என்னொரு கவிதை, ரொம்பவும் ரசித்தேன்..குறிப்பாக :

    /கட்டியணைத்த வேகங்களை தாங்க முடியாமல்
    மழைதூறலாய் மலர்சாலையாய்
    உனக்குள் என்னை ஆயுள் கைதியாக்கி கொண்டேன்//

    //விழிகள் திறந்த விடியல்கள் புரியாமல்
    இருட்டுக்குள்ளே
    அடையாளமாய் நானும்
    காதலித்து பார்த்தேன்//

    ReplyDelete
  6. கவிதை மிகவும் அழகா இருக்கிறது தர்ஷி
    வரிகளை அழகா கையாண்டு இருக்கிறீர்கள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. வரிகளை அழகா கையாண்டு இருக்கிறீர்கள்..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. உணர்வுகள் கவிதை மழையாக....
    ........மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
    ஆனால் சோகம் நிறைவேறாமல் போன காதலுக்காய் ..

    ReplyDelete