
மழையின்றி
நிலமின்றி
விதையின்றி நின்றிருந்த
என் தோட்டம் எங்கும் வண்ண பூக்களாய்
நீ மலர்கிறாய்
இதயம் வலிக்காது
கண்கள் கனக்காது
ஆனந்த நீராகி கன்னம் வழியே
நீ வழிகிறாய்
பாதை தெரியாத
பயணம் புரியாத இருட்டுக்குள்
கை கோர்த்து வழித்துணையாகி
நீ நிற்கிறாய்
உலகம் மறந்து
உறங்கும் நிமிடங்களில்
கனவாகி
நீ நிறைகிறாய்
கனவு கலைந்தும்
கலையாத புன்னகையாகி
உதட்டோரத்தில்
நீ உறைகிறாய்
கடல் வானம் கடந்து
கறையில்லா அன்பால்
என் உள்ளமெங்கும்
நீ வேரோடுகிறாய்
நீ வரும் வரை
என் நிழல் மறந்திருப்பேன்
நீ வந்து விடு
உன் நிழலாகி நான் வாழ்வேன்…
//நீ வரும் வரை
ReplyDeleteஎன் நிழல் மறந்திருப்பேன்
நீ வந்து விடு
உன் நிழலாகி நான் வாழ்வேன்…//
ம்ம்ம்ம்ம்.... ! வந்து விடட்டும்.
வாழ்த்துகள்.
hi கொற்றவை வாழ்த்துகள்
ReplyDeletehi
ReplyDeletethanks a lot anonymous..
ReplyDelete