09 September 2011

அன்னையும் அவளும்

பள்ளி பருவத்திலிருந்தே
செலவு செய்தால் குறைந்து விடுமோ என்று
எந்த பெண்ணிடமும் சொல்லாமல்
சேமித்த காதலை
சின்ன சிரிப்பாலும் கடைக்கண் பார்வையாலும்
மொத்தமாய் திருடி கொண்டு காதலியானாள்..

அதிகம் பேசாதவள்
நிறுத்தாமள் பேசினாள்..
நான்கே எழுத்துகள் கொண்ட என் பெயருக்குள்
நாற்பது செல்ல சுருக்கங்கள்
அவள் செய்தாள்..

ஒரு நாள் அலை கரையில்
மணல் விளையாடியபடி கேட்டாள்
"ஒரு நாளில் எத்தனை தடவை என்னை நினைப்பீர்கள்?"
"உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு"
என்றேன் தொன்று தொட்டு வந்த காதலன்களை போல‌

அடுத்து கேட்டாள்
"உங்களுக்கு உங்க அம்மாவையா என்னையா அதிகம் பிடிக்கும்?"
என்று
அவளை தான் பிடிக்கும் என்று நான் சொல்வதை
எதிர்பார்த்திருப்பாள்
ஆனாலும்
"என் தாயை என்றேன்"
சின்னதாய் ஒரு சிணுக்கத்துடன்
"நான் தான் உஙகள் உலகம் என்றீர்களே?? எல்லாம் பொய்யா?? "
என்றாள்
"காதலியே... நீ என்னை காதலிக்க தகுதிகள் எனக்குண்டு
இல்லாவிடில் காதலிப்பாயா??
ஆனால்
என் முகம் அறியும் முன்னிருந்தே என்னை நேசிப்பவள் அவள்
ஆதலினாள் அவள் உன்னை விட ஒரு படி மேல் தான்"
என்றேன்

3 comments:

  1. என் முகம் அறியும் முன்னிருந்தே என்னை நேசிப்பவள் அவள்
    ஆதலினாள் அவள் உன்னை விட ஒரு படி மேல் தான்"
    என்றேன்

    ReplyDelete
  2. ///என் முகம் அறியும் முன்னிருந்தே என்னை நேசிப்பவள் அவள்
    ஆதலினாள் அவள் உன்னை விட ஒரு படி மேல் தான்///

    மிக அருமையான அற்புதமான வரிகள்

    ReplyDelete