11 November 2011

தொடுவானம்


எடுத்து வைத்த முதல் அடி...
வலிக்க வைத்த முதல் ஊசி...
அணைத்து தந்த முதல் முத்தம்...
ஆறு வயதில் நான் கண்ட முழு நிலா...
எடுத்து வளர்த்த பட்டு பூச்சி...
ஆயிரம் தரம் குட்டு பட்டும்
கைக்குள் வராத‌ 'இ'...
அலுக்காமல் கேள்விகள்
சலிக்காமல் நீ சொல்லும் பதில்கள்...
இளம் காலையில் துயில் கலைத்து
நீ ரசிக்க நான் சிணுங்க பார்த்த
சூரியன் திருடிய பனித்துளி
வானம் எட்ட எட்ட பறந்த
முதல் கடற்கரை பட்டம்...
நீர் துளைந்து நான் கொண்ட காய்ச்சல்
விழி நனைய உடன் நின்ற நீ...


பத்து வயது நான் நிரம்பு முன்
தெவிட்ட தெவிட்ட நீ தந்த அத்தனை
நினைவுகளும் இன்னும் கலையாமல்
மனப் படமாய் எனக்குள்..

இருளில் நான் மருள
ஒளியாய் நீ நிற்பாய்
இன்றும் இருளில் மருள்கிறேன்.............

நினைவுகள் சுமந்து
நிஜத்தை தொலைத்து
வருடங்கள் கழிந்தும்
வலி மட்டும் கழியாமல்
கரை அறியா தரையில் நானும்
ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
தொடுவானமாய்!

To my younger brother, who is an eternity away from me.

8 comments:

  1. //ஆயிரம் தரம் குட்டு பட்டும்
    கைக்குள் வராத‌ 'இ'...//

    சிறப்பான சில ஞாபகங்களைப் பகிர்ந்திருக்கும் கவிதை ... ஞாபகங்களை மீட்டிச் செல்கிறது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தொடுவானம் படிக்க படிக்க சுவையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நினைவுகள் சுமந்து
    நிஜத்தை தொலைத்து
    வருடங்கள் கழிந்தும்
    வலி மட்டும் கழியாமல்
    கரை அறியா தரையில் நானும்
    ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
    தொடுவானமாய்!

    ReplyDelete
  4. நினைவுகள் சுமந்து
    நிஜத்தை தொலைத்து
    வருடங்கள் கழிந்தும்
    வலி மட்டும் கழியாமல்
    கரை அறியா தரையில் நானும்
    ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
    தொடுவானமாய்!

    ReplyDelete
  5. நினைவுகள் சுமந்து
    நிஜத்தை தொலைத்து
    வருடங்கள் கழிந்தும்
    வலி மட்டும் கழியாமல்
    கரை அறியா தரையில் நானும்
    ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
    தொடுவானமாய்!

    ReplyDelete
  6. நினைவுகள் சுமந்து
    நிஜத்தை தொலைத்து
    வருடங்கள் கழிந்தும்
    வலி மட்டும் கழியாமல்
    கரை அறியா தரையில் நானும்
    ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
    தொடுவானமாய்!

    ReplyDelete
  7. நினைவுகள் சுமந்து
    நிஜத்தை தொலைத்து
    வருடங்கள் கழிந்தும்
    வலி மட்டும் கழியாமல்
    கரை அறியா தரையில் நானும்
    ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
    தொடுவானமாய்!

    ReplyDelete