22 December 2009

காதல் கடிதம் 1


காகிதம் இல்லை…
பேனா மை இல்லை
எழுதுகிறேன் உனக்கொரு கடிதம் இங்கு நான்
உன் வருகை கண்டு
கன்னத்து நாண சிவப்பு
வண்ணக்காகிதமாக…
விழிகளின் அசைவுகள்
வார்த்தைகளாக…
ஒவ்வொரு இமைத்துடிப்பும்
சொற்களிற்கு பொருள் தரும் வண்ணம்
இடைவெளிகளாக..
தோன்றிய சின்ன புன்னகைகள்
ஒவ்வொரு வசனத்துக்கும் முற்று புள்ளியாக..
இதயத்தில் ஒவ்வொரு துடிப்பும்
அதிகரிக்கும் வேகம்
என் காதலின் ஆழம் இயம்ப…
பஞ்சு விரல்களில் தோன்றும்
சின்ன நடுக்கம்
என் காதல் சொல்ல தமிழில் வார்த்தைகள்
போதவில்லையே என்ற தவிப்பாக
செல்ல சிரிப்புடன் கவிழும் வதனம்
காகித மடிப்பாக
இதழ் கடித்தேன்
என் அஞ்சலுறை
ஒட்டி கொள்ள
ஒட்டிய வினாடி என்
கண்ணின் கடையில்
துருத்திய ஒற்றை துளி
உன் விலாசம் எழுதியது….
ஆனால் நான் நீட்டிய அஞ்சல் காணாமல்
எனை நீ தாண்டி சென்றாய்..
“மக்கு காதலனே !!! “
என மனதுக்குள் வைது கொண்டேன்.
முதல் காதல் கடிதம் சேரவில்லையே என்ற
தவிப்புடன்…..

11 comments:

  1. மக்கா ம்ம் பாவம்தான்

    ரொம்ப அழகா எழுதுறீங்க...!

    ReplyDelete
  2. ஆனால் tamilish இல் இணைத்தபோது publish ஆகவில்லை..ஏன் என்று தான் புரியவில்லை…:(

    ReplyDelete
  3. “மக்கு காதலனே !!!//

    :))

    'லூசு பெண்ணே' க்கு நல்ல எதிர் பிட்டு... கவிதை கலக்கல்.

    ReplyDelete
  4. புதுசா வந்தாலே அப்படித்தான் நிறைய பேர் பதிவுகளை வாசிங்க பெரிய ஆளுங்க போஸ்ட்ல பின்னூட்டம் போடுங்க வாசிக்கிற எல்லாருக்கும் ஓட்டு போடுங்க கொஞ்சம் எல்லாரும் வாசிக்க ஆரம்பிச்சுடுவாங்க...

    எழுத்து ஒரு வேள்வி மாதிரி படிக்கிறாங்களா? பிரபலமாகுதான்றதுக்காக எழுதாம தொடர்ந்து எழுதுங்க ரொம்ப வருசம் கழிச்சு நீங்களே வந்து வாசிக்கும் போது சந்தோசமா இருக்கும் பேரப்புள்ளைகளுக்கு காட்டும் போது இன்னும் சந்தோசமா இருக்கும் கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க சிரிப்பு வருதுல்ல...

    தொடர்ந்து எழுதுங்க...!

    ReplyDelete
  5. நான் சொன்னது உங்களுக்கு விளங்கேல்ல…tamilishல தொடரும் இடுகைகளுக்குள்ள வரேல்ல…அதான் விளங்கேல்ல…இருந்தாலும் உங்க கருத்தும் சரிதான்….:) ஆனா பேரப்பிள்ளை வர போனது ரொம்ப too much…:)

    ReplyDelete
  6. ரொம்ப சிம்பிள்.. go to tamilish find "tamil idukaikalai inaika" on right top corner. click on it. then follow the instructions..

    ReplyDelete
  7. //ஒவ்வொரு இமைத்துடிப்பும்
    சொற்களிற்கு பொருள் தரும் வண்ணம்
    இடைவெளிகளாக..
    தோன்றிய சின்ன புன்னகைகள்
    ஒவ்வொரு வசனத்துக்கும் முற்று புள்ளியாக..//

    அருமை..!!

    ReplyDelete
  8. ok...there we go..I added like that and but the thing is it says it may be a website bug,...so it cannot be appear...But apart from that I am so happy for your kind support...:) thanks a lottt.

    ReplyDelete
  9. tharshy SOMETIMES IT HAPPENS... IF IT CONTINUES JUST MAIL THEM... IT WILL BE SOLVED.

    ReplyDelete
  10. awww...thanks a lot anna...:)

    ReplyDelete
  11. அருமை...
    சிலிர்க்க வைய்த்தது வரிகள் ஒவ்வொன்றும் ..

    ReplyDelete