18 September 2010

அவளும் இவளும்



ஐந்து வயதில் கற்ற அரிசுவடி
எட்டு வயதில் இறக்கிய இளஞ்சோறு
பதினெட்டு வயதில் பெற்றவர் மணக்கூலி கொடுக்க
உற்றவன் புனைந்த பொற்தாலி
இருபது வயதில் இடுப்பில் சிரித்த மகவு
இலக்கணத்தின் அழகி அவள்…

ஐந்து வயதில் ஐபாட்
எட்டு வயதில் கைபேசி
பத்து வயதில் மடிகணினி
பதினெட்டு வயதில் மம்மி டாடி
டம்மியாக
காதலுக்கும் நட்புக்கும் இடையில்
காதில் கடுக்கனுடன்
நின்ற ஏதோ ஒன்றின் காதலி
அழகின் புது இலக்கணம் இவள்…

2 comments:

  1. இலக்கணத்தின் அழகி அவள்

    அழகின் புது இலக்கணம் இவள்


    excellent........…

    ReplyDelete
  2. //நின்ற ஏதோ ஒன்றின் காதலி
    அழகின் புது இலக்கணம் இவள்//
    nice nice

    ReplyDelete