04 October 2010

எது காதல்?


புத்தகத்து நடுவில் மயில் இறகு போல
பிரசவிக்காமலே போன
பள்ளி காதல்.

வாத பிரதிவாதம் முடிந்தும்
தீர்ப்பு எழுதாமலே
முடிந்து போன கல்லூரி காதல்.

செவியும் உதடும்
சில இலக்கங்கள் தேய்ந்தும்
இலக்க மாற்றத்துடன்
தொலைந்து போன செல் பேசி காதல்.

மணிக்கு முன்னூறு வேகத்தில்
கைவலிக்க விசைப்பலகையை
கையாண்டும்
கண்காணாமலே போன முகப்புத்தக காதல்.

ஹோசானாவுக்காகவே
அடுத்தவீடு இளம் பெண்களிடம்
அநயாசமாய் வந்த
விண்ணை தாண்டி வருவாயா காதல்.

புது அச்சம் புன்னகை
கடனில் முழுகி சில பொன்னகை
புது மணமகளிடம்
புது வெட்கம் போல வந்த கட்டாய காதல்.

இட்லிக்கு சட்னி அரைத்துவிட்டு
வியர்வை துளிர்க்க
வேலைக்கு கணவனுடன்
மனைவியும் சேர்ந்தோடும்
சம்சா(கா)ர கடல் காதல்

ஏதோ போல மனைவி இருக்க
ஏதோ போல ஒன்று தேடும்
ஏதோ ஒரு காதல்.

எது காதல்?

2 comments:

  1. காதல் ஒவ்வொரு வயசில் ஒவ்வொரு
    முகம் காட்டும்.
    கவிதை வசீகரம்.

    ReplyDelete
  2. azhagana kavithai :) vaazhththukkal!

    ReplyDelete