
வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையில் இருந்த
கடைசி நிமிட துளிகளில்
செத்துகிடந்த ஆயிரம் கனவுகள்
ஆவிகளாய் ஆதங்கங்களாய் மருட்டின
செத்து கொண்டிருந்த கடைசி கனவு ஒன்று
உயிர் வலிக்க என்னை
உற்று பார்த்தது
பெற்று போட்டு விட்டு பேண மறுத்த தாயை பார்ப்பது போல்…
ஏகாந்தத்துக்குள் ஆயிரம் கேள்விகள் அது கேட்க
சந்தர்ப்பங்களை சாடினேன்
சூழ்நிலைகளென சூழுரைத்தேன்
கூசாமல் பொய்யுரைத்தேன்
மானுடத்தையும் மல்லுக்கிழுத்தேன்
ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு
மறைந்து போனது என் கடைசி கனவும்!!
கோழையாய் நானும் செத்து போவேனோ??
+++++++++++++++++++++++
வாழ்க்கையே ஒரு கனவுதானோ?
ReplyDelete//செத்து கொண்டிருந்த கடைசி கனவு ஒன்று
ReplyDeleteஉயிர் வலிக்க என்னை உற்று பார்த்தது
பெற்று போட்டு விட்டு பேண மறுத்த தாயை பார்ப்பது போல்…//
அழகிய உவமை.
azhakiya kavithai.
ReplyDeletepaaraaddukal.
mullaiamuthan
kaatruveli-ithazh
கவிதை நல்லா இருக்கு
ReplyDeleteகனவில்கூட கடைசிக் கனவா. தலைப்பு நல்லாயிருக்கு கவிதையும் அருமை..
ReplyDeleteஆவிகளாய் ஆதங்கங்களாய் [மி]மருட்டின
என்று வருமோ!.
கனவுகள் தொடரட்டும்..
மன்னிக்கவும்
ReplyDelete//ஆவிகளாய் ஆதங்கங்களாய் //மிரட்டின//
மருட்டின
என்று வருமோ!