03 October 2011

தண்டனை


இச்சைகள் அடக்கியறியா உடல்
வக்கிரங்கள் வார்த்தெடுத்த மதி
உடலுக்கும் மதிக்கும் உவப்பளிக்க
தற்காலிகமாய் ஒளிந்து கொண்ட மனசாட்சி
ஈசன் மறைந்து நீசன் தோன்ற
இத்தனை போதாதா???

கண்ணை கட்டி ஆடிய வெறியாட்டம்
பல வாளி தண்ணீர் துளிகளால்
உடல் கழுவிய பின்னும்

வேதனைகளை வில்லாக்கி
வினாக்களில் நாணேற்றி ஏவிய
ஒரு காய்ந்த கண்ணீர் துளி அம்பு
உருகி உருளும் அருவமான
மெழுகு துளிகளாகி உஷ்ணம் மாறாமல்
உடல் வருத்தியது...

நீயல்ல‌ என சாட்சியங்களும்
சந்தர்ப்பம் என சட்டமும்
பொய்யை மெய்யாய்
சான்றழிக்க
அசரீரியாய் ஒலித்த உண்மை மட்டும்
மனதை சல்லடைகளாக்கி
மனிதத்தை உலுக்கியது...
செங்குருதி வற்றி
அமிலத்தில் இதயம் துடிப்பது போல்
நெஞ்செரித்தது..
அஃறிணை உதாரணம் நீ என
கண்ணாடியில் தோன்றி விம்பமே
காறி உமிழ்ந்தது..

ஆசை கோபம் ஓய்ந்து
உறங்கும் மனிதம் விழிக்கையில்
சில தவறுகளின் தண்டனைகள்
இரு முனை கூர் கொண்ட ஆயுதத்தால்
ஒரே தடவையில் வருத்துவது போல
பலர் அறியாதது
ஆனால் வலி மிகுந்தது.


+++++++++++++++++

5 comments:

  1. அட!அட!அட!

    இருளில் தனிமை சுயத்தை தத்ரூபமாக்கியிருக்கும் வரிகள் அருமை.

    வார்த்தைகளை சுண்டக்காய்ச்சி வரிகளை குறைத்துத் தந்தால் இது போன்ற செரிவான கவிதைகள் கூடுதல் ஒளியுடன் மிளிரும் என்பது என் தாழ்மையான கருத்து. இது அறிவுரை அல்ல.

    ReplyDelete
  2. well as for me I used to believe that whatever human-ness the criminals have die the moment they commit their crimes, may be I need to revise my views :D

    ReplyDelete
  3. வார்த்தைகளின் வலிமை வாவ்..
    ஒரு வித வலி மனதில் எழுந்ததும் இரண்டாம் முறை படிக்கும்போது மனம் அமைதியானதும் உண்மை..

    அஃறிணை உதாரணம் நீ என
    //
    கண்ணாடியில் தோன்றி விம்பமே
    காறி உமிழ்ந்தது..//
    எங்கள் சுயங்கள் எமக்கு மட்டுமே வெளிக்கும்

    ReplyDelete
  4. ஆசை கோபம் ஓய்ந்து
    உறங்கும் மனிதம் விழிக்கையில்
    சில தவறுகளின் தண்டனைகள்
    இரு முனை கூர் கொண்ட ஆயுதத்தால்
    ஒரே தடவையில் வருத்துவது போல
    பலர் அறியாதது
    ஆனால் வலி மிகுந்தது.

    அருமையான வரிகள் .தவறை உணர்ந்த மனிதனின்
    மனநிலையை அழகாய் வெளிக்காட்டியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. ஆசை கோபம் ஓய்ந்து
    உறங்கும் மனிதம் விழிக்கையில்
    சில தவறுகளின் தண்டனைகள்
    இரு முனை கூர் கொண்ட ஆயுதத்தால்
    ஒரே தடவையில் வருத்துவது போல
    பலர் அறியாதது
    ஆனால் வலி மிகுந்தது

    ReplyDelete