27 November 2010

மாற்றங்கள்


நண்பன் அழ வைக்கிறான்
எதிரி எதுவும் பேசாமல் தாண்டி செல்கிறான்

உண்மைகள் ஒலியிழக்கிறது
பொய்கள் புரிந்துணர்வு கொண்டாடுகிறது

பகல்கள் பயமுறுத்துகிறது
இரவுகள் இயல்பாய் நிசப்தாமியிருக்கிறது

தெய்வம் சிலைகளாகவே சிந்திக்கிறது
மனிதன் சிந்திக்காமல் தெய்வமாகிறான்

நட்பு காதலாகிறது
காதல் மறுபடியும் நட்பாகிறது

இதயம் அங்கேயே இருக்கிறது
இணையம் காதல் பரிமாற்றம் செய்கிறது

இதிகாசங்கள் மறக்கப்படுகின்றன
இழி காவியங்கள் எழுதப்படுகின்றன

அழகிய தருணங்கள் தொலைகின்றன
தொலைபேசிகள் பேசிக்கொள்கின்றன

மரங்கள் தறிக்கப்படுகின்றன
விதைகள் மாற்றியமைக்கப்படுகின்றன

இயற்கையை சிதைக்கிறோம்
அதையே மீண்டும்
செயற்கையால் மீள் நிரப்புகிறோம்

3 comments:

  1. ”நட்பு காதலாகிறது
    காதல் மறுபடியும் நட்பாகிறது”

    ”இயற்கையை சிதைக்கிறோம்
    அதையே மீண்டும்
    செயற்கையால் மீள் நிரப்புகிறோம்”.
    Both two lines giving me some different meaning..Nice one...

    ReplyDelete
  2. aana nee mattum maaramal kulikurela enda uruthiyaana mudivoda irukuraai hehehe

    ReplyDelete
  3. மாற்றங்கள் இயல்புதானென்றாலும்.
    சில மாற்றங்கள் தவிர்க்கப் பட வேண்டியவை.

    ReplyDelete