27 November 2010
மாற்றங்கள்
நண்பன் அழ வைக்கிறான்
எதிரி எதுவும் பேசாமல் தாண்டி செல்கிறான்
உண்மைகள் ஒலியிழக்கிறது
பொய்கள் புரிந்துணர்வு கொண்டாடுகிறது
பகல்கள் பயமுறுத்துகிறது
இரவுகள் இயல்பாய் நிசப்தாமியிருக்கிறது
தெய்வம் சிலைகளாகவே சிந்திக்கிறது
மனிதன் சிந்திக்காமல் தெய்வமாகிறான்
நட்பு காதலாகிறது
காதல் மறுபடியும் நட்பாகிறது
இதயம் அங்கேயே இருக்கிறது
இணையம் காதல் பரிமாற்றம் செய்கிறது
இதிகாசங்கள் மறக்கப்படுகின்றன
இழி காவியங்கள் எழுதப்படுகின்றன
அழகிய தருணங்கள் தொலைகின்றன
தொலைபேசிகள் பேசிக்கொள்கின்றன
மரங்கள் தறிக்கப்படுகின்றன
விதைகள் மாற்றியமைக்கப்படுகின்றன
இயற்கையை சிதைக்கிறோம்
அதையே மீண்டும்
செயற்கையால் மீள் நிரப்புகிறோம்
Subscribe to:
Post Comments (Atom)
”நட்பு காதலாகிறது
ReplyDeleteகாதல் மறுபடியும் நட்பாகிறது”
”இயற்கையை சிதைக்கிறோம்
அதையே மீண்டும்
செயற்கையால் மீள் நிரப்புகிறோம்”.
Both two lines giving me some different meaning..Nice one...
aana nee mattum maaramal kulikurela enda uruthiyaana mudivoda irukuraai hehehe
ReplyDeleteமாற்றங்கள் இயல்புதானென்றாலும்.
ReplyDeleteசில மாற்றங்கள் தவிர்க்கப் பட வேண்டியவை.